India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நீலகிரியில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் ஊராட்சி கொலக்கம்பை பகுதி மக்களுக்கு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்திலும், நெடுங்குளா பகுதி மக்களுக்கு மிலிதேன் ஊராட்சி சமுதாய கூடத்திலும், பாலகொல பகுதி மக்களுக்கு தேணாடு சமுதாய கூட்டத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (5.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலில் மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும், ரயில்9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், ‘யாராவது வாகனம் வாங்கும் போது ஆன்லைனில் முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் அதை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.,5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் (ம) மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின் அவர் பேசுகையில், சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.