India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினை ஊற்ற கரவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் (ம) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கு குருவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி மன்ற தலைவர் வாணிஸ்வரி உடன் இருந்தார். திரளான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
உதவித்தொகை என்ற பெயரில் வரும் பொய்யான குறுஞ்செய்திகளை நம்பி அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. மேலும் பண இழப்பு தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஷேர் பண்ணுங்க.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன் கருதி இன்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
கோவை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
தருமபுரி ஆட்சியர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தர்மபுரியை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அடையாள அட்டை எண்ணினை பதிவு செய்யாமலோ அல்லது இதுவரை தங்களின் குடும்ப நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படாமலோ இருந்தால் தர்மபுரி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*
எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் (50) இவர் கடந்த 1ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நிவாரணம் பெற கடந்த 3 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காளான் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து அரசு நிதியை சித்திரவேல் மனைவி சுமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று கருவந்தா சி.எஸ்.ஐ மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சிக்கான முகாம் நடுவக்குறி .பி.ஆர்.சி கட்டிடத்திலும், நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கமல கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.