Tamilnadu

News August 4, 2025

சேலம் மாவட்டத்திற்கு 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

image

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் புதன்கிழமை ஆகஸ்ட்-6 தேதி பொங்கல் வைபவம் நடைபெற உள்ளது. அதற்காக அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள் மாற்றாக 23ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்

News August 4, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News August 4, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், (04.08.2025) ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும், அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 4, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

விழுப்புரம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.

News August 4, 2025

குழந்தையை சாலையில் விட்டுச்சென்ற மர்ம நபர்!

image

குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 2 சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர், குழந்தையை இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 4, 2025

அரசுப் பொருட்காட்சி குறித்து அமைச்சர் பேச்சு!

image

சேலம் அரசு பொருட்காட்சி போஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பார்வையிட்ட மொத்த பார்வையாளர்கள் 1,47,267, இதில் பெரியவர்கள் 1 21,845 மற்றும் சிறுவர்கள் 25,422 பேர் ஆவார்கள். எனவே இந்த ஆண்டும் பொதுமக்கள் இந்த அரசுப் பொருட்காட்சியை பயன்படுத்தி கொண்டு பயனடையவும், விழா சிறக்கவும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News August 4, 2025

சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் ஜே.பி., மித்ரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் ஆன நிலையில் சட்டவிரோதமாக இங்கு பட்டாசு தயாரிப்பு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு அறையில் பட்டாசுக்கான திரி தயாரிப்பது தெரிந்தது. போலீசாரை கண்டதும் இருவர் தப்பி சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 4, 2025

காவல்கிணறு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

image

காவல்கிணறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். காவல்கிணறு என்ற பெயர் வரக் காரணம், அந்தக் கிணறு ஒரு காலத்தில் ஊருக்கு காவல் தெய்வமாக இருந்திருக்கிறது. அதனால் தான் அதற்கு காவல் கிணறு என்று பெயர் வந்தது.

News August 4, 2025

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

image

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!