India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆக.4) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர்மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் வேலூர் ஊரீசு கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழர்களின் மரபையும் தமிழின் பெருமிதத்தையும் அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று ( ஆகஸ்ட் 4 ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பாளை கேடிசி நகரில் கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டார். கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய பட்டியலின ஆணையம் இன்று நெல்லை வந்துள்ளது. ஆணைய தலைவர் கிஷோர் மக்குவானா நெல்லையில் இரண்டு நாள் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 04) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 அன்று கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள், தள்ளுபடி மானியத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற புதிய திட்டத்தில் தனிநபர் திட்ட தொகை வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04546-260995, 9445029480 என்ற தாட்கோ அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.