India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது உதவி ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்து வருகிறது. இந்த 7 காவல் நிலையங்களும் ஆய்வாளர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், அம்பாசமுத்திரம் டவுன் சோனா மஹால், ராஜவல்லிபுரம், கோடகநல்லூர் கலந்தபனை ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.05) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஆக.5) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் அலுவகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்திற்கான பொது ஏலம் (ஆகஸ்ட் 18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும்வர்கள், காலை 10 மணி முதல் 11 மணி வரை ரூ.2,000 முன் வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்யலாம். வெற்றி பெறுபவர்கள் ஏலத் தொகை மற்றும் 18% ஜிஎஸ்டி உடனடியாக செலுத்த வேண்டும். (ஆகஸ்ட் 10) அன்று வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம் .
தென்காசி மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த லிங்கை <
தமிழ்நாடு ஆதி திராவிடவீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. BSC நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதி திராவிட பழங்குடியினர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் ரூ.300000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.<
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக தரை தளத்தில் ஆக.7 அன்று “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை ஆட்சியர் சுகபுத்ரா துவங்கி வைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
மேலும் வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னையில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவான 35 புகார் மனுக்கள் மீதும் மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு மண்டலங்களில் சுமார் 156 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.1.66கோடி மீட்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் ரூ18.08கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.