Tamilnadu

News August 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் வரத்து

image

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (19.08.2025) காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,15,000 கன அடியாக தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

கரூர்: டிகிரி முடித்தால் ரூ.35,900 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘Assistant Programmer’ பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.35,900 முதல் ரூ.1,32,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint செய்யலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபுடிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

தூத்துக்குடி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 19, 2025

ஆக.25 ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர் தேர்ந்தெடுக்கும் முகம் ஈரோடு வஉசி மைதானத்தில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான முன் ஏற்பாடுகளை கர்னல் அன்சுல் வர்மா நேற்று பார்வையிட்டார். ஈரோடு, சேலம் போன்ற 11 மாவட்ட இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

News August 19, 2025

தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

News August 19, 2025

நாமக்கல்: முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4.95 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 5.00 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டை விலை உயர்வடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 19, 2025

தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுவில் காலியிடம்

image

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுவில் சமூகப்பணி உறுப்பினர் 2 இடங்களுக்கு அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. 2015ம் ஆண்டு இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நியமனத்திற்கு 35 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், குழந்தைகள் நலன், கல்வி, உளவியல், சட்டம் போன்ற துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 மாலை 5.00 மணி.

error: Content is protected !!