India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்.23ஆம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தொடர்புடைய இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் சேலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் காரணமாக, சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் ஆணையாளர் ரூ.10 நாணயத்தை அனைத்து மாவட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 907 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் என முகாமில் இதுவரை 12,836 பேர் விண்ணப்பித்துள்ளதாக என அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
கோத்தகிரி டான்பஸ்கோ சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 6 குரங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர் அவைகளை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவை மின்னல் தாக்கி பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றார்.
#காலை 9 .30 மணி சட்டமன்ற பொது கணக்கு குழு குமரியில் கூடுதல் மற்றும் திட்டப் பணிகள் ஆய்வு.#காலை 10 மணிக்கு தக்கலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆலோசனைக் கூட்டம். #கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பாரதி சார்பில் பயிற்சி முகாம்.#காலை 10 மணி குலசேகரம் சந்திப்பில் இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐஎம் சார்பில் வாகனப் பிரச்சாரம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.