India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.
தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம், பொதுமக்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் முன் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பம் (AI) மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று (ஜூலை 9, 2025) தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜூலை.09), வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரூட் ஷோ நடத்துகிறார். பின்னர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். இந்தப் பயணம் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.
வேலூர் மாவட்டத்தில் வரும் 12.7.2025 அன்று நடைபெறும் TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 84 தேர்வு மையங்களில் மொத்தம் 24,654 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். இது தொடர்பாக ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். தேர்வர்கள் நேரத்திற்கு முன்னதாக மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படும் என கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கோடை விழா நிகழ்ச்சியின் போது அறிவித்தார். ஆனால் இன்று வரை ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது. ஆகவே எப்போது வானொலி நிலையம் தொடங்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 10 முதல் செப்டம்பர் இறுதிவரை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்கள் சேகரிக்கும் பணியை முன்களப் பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். வீடு தோறும் நேரில் சென்று முழுமையான தரவுகள் பதிவு செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ப. தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 09.07.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோவிந்தராசு., ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.