Tamilnadu

News July 10, 2025

கடலூர் மாவட்டத்தின் இன்றைய மின் தடை

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை.10) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கீழக்குப்பம், பூரங்கனி, காட்டுக்கூடலூர் சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி, வடக்குத்து, பாளையங்கோட்டை, புவனகிரி, வானமாதேவி, மதுராந்தகநல்லூர், கானூர், சோழத்தரம், குறிஞ்சிகுடி, ஓரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். SHARE !

News July 10, 2025

மதுரையில் ஒரே நாளில் 2149 பேர் கைது

image

மதுரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்த முன் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., உட்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 846 பெண்கள் உட்பட 2149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

News July 10, 2025

பாலையம்பட்டி பைபாஸில் விபத்து; மூவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி ஊராட்சியில் (ஜூலை 10) காலை 5 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களான மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரண்டு லாரிகளிலும் முன் பக்கம் முற்றிலும் சேதமாகியது. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 10, 2025

திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு: கமிஷனர் அறிக்கை

image

திருச்சி மாநகர காவல் துறை வாகன சோதனையின் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 251 டூவீலர்கள், 2 கார்கள் , 1 ஆட்டோ ரிக்ஷா, 4 மிதிவண்டிகள் என மொத்தம் 258 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் ஜூலை 15-ம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 10, 2025

நாகை: நாய் குறுக்கே வந்ததால் சாலை விபத்தில் ஒருவர் பலி

image

நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் நேற்று (ஜூலை 9) இரவு வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறிய கதிரவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 10, 2025

நெல்லை: 23 கொலைகள்; கதி கலங்கும் மக்கள்

image

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களுக்காக 22 கொலை வழக்குகளில் 23 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.

News July 10, 2025

குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

News July 10, 2025

தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம், பொதுமக்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும் முன் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பம் (AI) மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றி பணம் பறிக்கும் மோசடிகளில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று (ஜூலை 9, 2025) தெரிவித்துள்ளது.

News July 10, 2025

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

image

ராமநாதபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜூலை.09), வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.

News July 10, 2025

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரூட் ஷோ நடத்துகிறார். பின்னர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். இந்தப் பயணம் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

error: Content is protected !!