India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!
வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலையைக் கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு 113 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உயரம், எடை, ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருவள்ளூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் (AREA SERVICE MANAGER) பணிக்கு 40காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், வயது 18 முதல் 40 வரை வேண்டும். இதற்கு மாதம் ரூ.15000-25000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம்தேதிக்குள்<
தூத்துக்குடி தொழிலாளர் நல உதவி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு மேசன் கார்பெண்டர் கம்பி வளைப்பு உள்ளிட்ட 12 வகையான தொழில்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார
இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் <
✅ மைலாப்பூர் பில்டர் காபி
✅ மெரினா பீச் சுண்டல்
✅ பர்மா பஜார் அத்தோ & மோய்கோ
✅ சௌகார்பேட்டை முறுக்கு சீஸ் சான்விச்
✅ வியாசர்பாடி மோலேசா
✅ மண்ணடி நோம்பு கஞ்சி & மட்டன் சமோசா
✅ சௌகார்பேட்டை லஸ்ஸி
✅ காசிமேடு கடல் உணவு
✅ ரிச்சி ஸ்ட்ரீட் குலாப்ஜாமூன், ரசகுல்லா, ஜிலேபி, பால்கோவா
✅ பெசன்ட் நகர் மீன் பஜ்ஜி, இறால் பஜ்ஜி
உங்க நண்பர்களோட இங்கெல்லாம் போயி ஒரு புடி புடிங்க… அவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.