Tamilnadu

News July 9, 2025

வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

image

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!

News July 9, 2025

அரியலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை திறப்பு

image

அரியலூர் மண்டலத்தில் கே.எம்.எஸ். 2024-2025 நவரை பருவத்தில் சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, சோழன்மாதேவி, குருவாடி, ஸ்ரீபுரந்தான் ஸ்ரீராமன் மற்றும் ஓலையூர் ஆகிய 8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் (ஜூலை 10) நாளை முதல் திறக்கப்பட உள்ளது. எனவே அந்தந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 60% தீக்காயத்துடன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News July 9, 2025

நெல்லை: சிறுமியை கொலை செய்து கற்பழித்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், 17 வயது சிறுமியை காதலித்து வந்த மாரிமுத்து (26) என்பவர், அப்பெண் தன்னை தவிர வேறு ஒருவருடன் பேசியதால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், சிறுமி இறந்தப்பின் அவரது உடலை கற்பழித்ததாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் மாரிமுத்துவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 9, 2025

சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

image

சோழர் ஆட்சியில் பழுவேட்டயர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாக திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…

News July 9, 2025

விருதுநகர்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

image

இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைத்தும், பட்டாசு ஆலைகளை 10 நாள்களுக்குள் ஆய்வு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

News July 9, 2025

மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

image

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.

News July 9, 2025

சரக்கு வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 9, 2025

கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

image

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News July 9, 2025

ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

image

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!

error: Content is protected !!