Tamilnadu

News July 9, 2025

சென்னையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 20 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (044-25268323)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

மீனவர்களுக்கு மானியத்தில் படகு-கால அவகாசம் வழங்கல்

image

புதுச்சேரி பகுதியைச் சார்ந்த மீனவர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மீனவர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News July 9, 2025

காஞ்சிபுரத்தில் 109 பாரன்ஹீட் அளவில் வெப்பம்

image

காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது பாரன்ஹீட் அளவில் 109 டிகிரியாகும். இதனால், காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் , கட்டுமான தொழிலாளர்கள், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர், உணவு டெலிவரி செய்வோர் என வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்

News July 9, 2025

நீலகிரி: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!

▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001755>>CLICK HERE<<>>)

News July 9, 2025

தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை

உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். (SHARE IT)

News July 9, 2025

விடுதிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், 19 விடுதிகளுக்கு, 2025 – 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த விடுதியில் மாணவ – மாணவியர் சேர nallosai.tn.gov.in இணைய வழியாகவோ அல்லது விடுதி காப்பாளர் உதவியுடன் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்

News July 9, 2025

கடலூர்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சிதம்பரத்தில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!