India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: ஆத்துார்,முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாலியான ஜெயவேல் (24). இவரது மனைவி 18 நாளுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்தநிலையில் நேற்று, அந்த குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்படவே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)
வள்ளியூர் மின்வாரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி(66). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன் பாலசுந்தர் இவருக்கு நேற்று காலை உணவு கொடுக்க சென்ற போது ருக்மணி தலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இதில் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் செயின், 7 பவுன் வளையல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் அப்பகுதியில் உள்ள டைப்ரைட்டிங் பயிற்சி செல்லும்போது அங்கு திருமணமான வாலிபரான தனிஷ்(25) என்பவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் தனிஷ் மாணவியை அருகில் உள்ள தோப்பில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் படி குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவான தனிஷை தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, <
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் தேவைக்கேற்ப இருப்பு உள்ள நிலையில், தனியார் நெல் விற்பனை நிலையங்களில் விதை நெல்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண் துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சங்கர்(24). காதல் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை இவரை ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ஓட ஓட வெட்டியத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி(23), ராஜபாண்டி(24), அபி(25) ஆகியோரை கைது செய்து மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதும், ரூ.1 கோடி பணமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெற விரும்பும் ஊராட்சிகள்,<
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தீயணைப்புத்துறை எல்கைக்கு உட்பட்ட வடக்கன்குளம் சிஎம்எஸ் சிறுவர் இல்லத்தில் பின்புறம் உள்ள கிணற்றில் நேற்று பள்ளி மாணவன் சேர்மதுரை என்பவர் விழுந்துள்ளர். தீயணைப்புத்துறை அங்கு சென்றபோது சிறுவன் கிணற்றில் மூழ்கிய நிலையில் இருந்தார். சிறுவனை இறந்த நிலையில் மீட்டு காவல்துறை வசம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வருகிற 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 251 பேர் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். காலை 9.30 மணி முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 95 பள்ளி கல்லூரிகளில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி கல்லூரிகளில் மொத்தம் 120 தேர்வு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.