India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிக்கான தூண்கள் அமைக்கும் பணியானது வைகை வடகரை சாலையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, வருகின்ற 10.07.2025-ம் தேதி முதல் ஆழ்வார்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பிலிருந்து குமரன் சாலை சந்திப்பு வரையுள்ள சாலையினை தற்காலிகமாக அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேலகவுண்டம்பாளையம் அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று வாகனத்தின் பேட்டரியின் அதிக வெப்பத்தால், திடீரென தீப்பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வில், திருநங்கை சரண்யா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து சரண்யாவை வாழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்: ராசிபுரத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வல்வில் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தபோது அவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. இங்கு வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE IT!
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில்
Cryptocurrency முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் கிடைக்கும் என மூன்றாம் நபர்கள் தங்களிடம் பணத்தை முதலீடு செய்ய சொன்னாலோ அல்லது பணம் கேட்டாலோ அவர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என திருவள்ளூர் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது உள்ள மொத்த அணைகள் விவரம் பின்வருமாறு
1)அப்பர்கோதையார் அணை
2)சின்ன குட்டியார் அணை
3)குட்டியார் அணை
4)லோயர்கோதையார் அணை
5)பேச்சிபாறை அணை
6)சிற்றார்-1அணை
7)சிற்றார்-2அணை
8)பெருஞ்சாணி அணை
9)புத்தன்அணை
10)மாம்பழத்தாறு அணை
11)முக்கடல் அணை
12) பொய்கை அணை
இதில் பேச்சிபாறை திருவிதாங்கோடு மன்னர் காலத்தில் கட்டப்பட்டது 100 ஆண்டுகளை கடந்த அணை ஆகும்.
திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகர செயலாளராக இருப்பவர், திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். இவர் இரண்டு திமுக வார்டு கழகச் செயலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இவரை கட்சி பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.