Tamilnadu

News July 8, 2025

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

image

வில்லியனூரை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றார்.அவர் கடனை திரும்பி செலுத்திய பின்னரும் ஆன்லைன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.மேலும் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்திலும் அவரின் உறவினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து ரூபாய் 8,838 பெற்றனர் .அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்தனர்.

News July 8, 2025

அன்புமணிக்கு எதிராக பாமக செயற்குழு தீர்மானம்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம். “பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது; நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது” என்று செயற்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

News July 8, 2025

கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

News July 8, 2025

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அபராதம்

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒரு லட்சம் ரூபாய் ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 8, 2025

விழுப்புரம்: தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை போராட்டம்

image

மத்திய பாஜக அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வரும் ஜூலை 9, 2025 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலை 10 மணிக்கு விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்ட அழைப்பிதழை போக்குவரத்து தொ.மு.ச சார்பில் மு.அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.

News July 8, 2025

JUST NOW: அரக்கோணத்தில் ரயில் சேவை பாதிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில், 90 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சரி செய்யும் முயற்சியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி , இண்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

News July 8, 2025

கரூா்: 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

image

கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (08.07.2025) விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மையத்திற்கு வருகைபுரிந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், ஆளுநரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், உடனிருந்தார்.

News July 8, 2025

சென்னை தான் முதலிடம்

image

படிப்பை முடித்து விட்டு புதிதாக வேலையில் சேருவோருக்கு அதிக சம்பளத்தை அள்ளித்தரும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு சமூக ஊடகமான இன்டீட், தற்போதைய சம்பள போக்கு, ஊழியர்களின் மனநிலை குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 1,311 நிறுவன உரிமையாளர்கள் உட்பட 3,842 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது தெரியவந்தது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!