Tamilnadu

News July 8, 2025

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்த கணவன்

image

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயது இளம்பெண், 26 வயதுடைய கொரியர் நிறுவன சூப்பர்வைசரை கடந்த ஆண்டு திருமணம் செய்து மதுரவாயலில் வசித்து வந்தார். சுற்றுலா செல்லும்போது நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

News July 8, 2025

திண்டுக்கல்: விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமான எண்

image

திண்டுக்கல்: விளையாட்டுதுறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004 என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News July 8, 2025

மின்சார ரயில்கள் ரத்து!

image

கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சென்னை மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை ரயில் மார்க்கத்தில் செல்லும் ஒருசில மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 8) மற்றும் வரும் 10ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்கவும் ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணிகள் குறித்து கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் 15.07.2025 முதல் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளனர்.

News July 8, 2025

கரூரில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு

image

கடவூர்: சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் மகள் அல்மாஸ்பானு (03). இவர் நேற்று சிந்தாமணிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே முத்துராஜா என்பவர் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அவரின் உடல் வைக்கப்பட்டது. இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

News July 8, 2025

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 1,800 பேர் விண்ணப்பம்

image

கோவை மாவட்டத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் உட்பட 1,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 30 ஸ்கிரைப் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் திருட்டு போன்ற மோசடிகளை தடுக்க வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

புதுவை: சீருடை பணியாளர்கள் நிலுவை படி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசின் 7-வது ஊதிய குழுவின் படி சீருடை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுவை காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினருக்கு 1.7.2017 முதல் 31.3.2021 வரை நிலுவையில் உள்ள சீருடை படி வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

நாமக்கல்: ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை(ஜூலை 9) முதல் வரும் திங்கள்கிழமை வரை
காலை 8: 30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில், மாலை 5: 25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளன.

News July 8, 2025

வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT

News July 8, 2025

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்? 1/2

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000429 (வாடகை அதிகாரியிடம்) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. தொடர்ச்சி

error: Content is protected !!