Tamilnadu

News August 19, 2025

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

image

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (ஆக.19) நீர்மட்டம்: வைகை அணை: 69.65 (71) அடி, வரத்து: 735 க.அடி, திறப்பு: 869  க.அடி, பெரியாறு அணை: 134.85 (142) அடி, வரத்து: 2769 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News August 19, 2025

BREAKING: பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு அபராதம்…!

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் கடந்த ஜூலை 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் 9 பேருக்கும் தலா ரூ.3 கோடி 50 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News August 19, 2025

காஞ்சியில் வேலைவாய்ப்பு முகாம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதனை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 19, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 19, 2025

BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

image

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News August 19, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

நெல்லை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற Toll-Free எண் (அ) 94875 99080 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

தூத்துக்குடி – நாகை 312 கி.மீ நீள பசுமை பாதை

image

இன்று (19.8.2025) இந்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி-நாகை இடையே புதியதாக 312 கிலோ மீட்டர் நீளத்தில் பசுமை வழி நான்கு வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் என கூறப்பட்டு உள்ளது.

News August 19, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!