India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி சங்கரப்பேரி ரோட்டில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் உரிய வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், முறைகேடாக இயங்கிய குடிநீர் இணைப்பை அதிகாரிகள் நேற்று (ஜூலை.07) துண்டித்தனர். வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 20.10.2016 க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரைமுறை செய்து கொடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 11:00 மணிக்கு நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்
கோவையில் பெரியநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் இன்று(ஜூலை.8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் ஜூலை 21, 2025 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.