India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbsim.in வழியாக விண்ரப்பிக்கலாம்.கடைசி தேதி ஆக-29 ஆகும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக 21-ல் எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கலாம்.SHARE பண்ணுங்க
திண்டிவனம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம் நகரம், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், செஞ்சி சாலை, கிளியனூர், உப்பு வேலூர், சலவாதி, சாரம், இறையனூர், எண்டியூர், ஜக்கம் பேட்டை, தெண்பசார், கீழ் சித்தாமூர், அன்னம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் மூலம் தனிநபர் இல்லங்களுக்கு இரு உறிஞ்சு குழி கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மானியமாக ரூ.12,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் தளமான திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் இன்று மாலை 4:30 மணி அளவில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகளும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
திருச்சி மாவட்டத்தின் குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விருப்பமுள்ளவர்கள் <
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நாளை (20.08.2025) 10 இடங்களில் நடைபெற உள்ளன. மணலி, மாதவரம், இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது நடைமேடை அமைக்கும் பணிக்காக நெல்லை – திருச்செந்தூர் நாளை காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(56729) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை – நெல்லை காலை 10.05 மணிக்கு புறப்படும் ரயில் சேரன்மகாதேவி, நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல மேலும் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
சிவகாசி பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு ஆடைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஜூலை 1 முதல் 2025 மார்ச் வரை பட்டாசு ஆலைகளில் 3056 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் இருந்த 746 தொழிற்சாலை நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடும் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 85 ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.