Tamilnadu

News December 28, 2025

கோவை: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

image

கோவை மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது கோவை உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News December 28, 2025

புதுகை: மு. ஊராட்சி மன்ற தலைவர் கைது – ரூ.10 லட்சம் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே சட்டவிரோதமாக சிலர் சூதாடுவதாக அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணாஜிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து, சூதாட வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

News December 28, 2025

விஜயகாந்த் நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை!

image

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் உள்ள அவர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் அதிகாலை முதல் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சற்றுமுன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News December 28, 2025

நாமக்கல் ஆட்சியர் பெயரில் போலி கணக்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 28, 2025

தருமபுரி புதிய வாக்காளர்கள் இணையதள பதிவு செய்யலாம்

image

தருமபுரி;புதிய வாக்காளர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ”New votersRegistration” என்ற இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்,ஏற்கனவே வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள தேவையில்லை தவறான தகவல் அளித்த வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு (ERO)அரசு பதிவுத்துறை செயலாளர் ஷீல்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

தருமபுரியில் 1,027 போ் பங்கேற்பு

image

தமிழகம் முழுவதும் நேற்று உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு 44 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 1,113 போ் விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வில் 1,027 போ் எழுதினா் 86 போ் பங்கேற்கவில்லை. பறக்கும் படை உறுப்பினா்கள் மற்றும் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 250 மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளா்கள் ஈடுபட்டனா்.

News December 28, 2025

BREAKING: ஓமலூர் EX எம்எல்ஏ நீக்கம்: இபிஎஸ் அதிரடி

image

அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்மையில் தவெக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகவும், குறிப்பாகச் செங்கோட்டையனை சந்தித்துத் தவெகவில் இணைந்ததாக புகைப்படங்கள் கசிந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

News December 28, 2025

பெரம்பலூர்: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

பெரம்பலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில்,<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

செயலில் செய்து காட்டியவர் விஜயகாந்த்: சீமான்

image

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.28) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் உள்ள அவர் நினைவிடத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமத்துவம், சகோதரத்துவத்தை சொல்லளவில் இல்லாமல் செயலில் செய்து காட்டியவர் விஜயகாந்த். அவர் செய்த உதவியால் IAS, IPS ஆனவர்கள் ஏராளம்” என்றார்.

News December 28, 2025

மயிலாடுதுறை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், e<>services.tn.gov.in <<>>என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!