Tamilnadu

News August 20, 2025

மதுரையில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வு செப். 28ல் நடக்கிறது. இத்தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்து வருகிறது, இந்த வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 20, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 20, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 20, 2025

கரூர் மக்களே முற்றிலும் இலவசம்!

image

கரூர் மக்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது.பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.SHAREit

News August 20, 2025

சென்னைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட் பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தலைநகர் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. இதனால், சென்னை வாசிகளே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். SHARE பண்ணுங்க.

News August 20, 2025

மயிலாடுதுறையில் மறக்கப்பட்ட இடம்!

image

நம் மயிலாடுதுறை பல வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முக்கியமாக சீர்காழி அருகே உள்ள தீவுக்கோட்டை சிறப்புமிக்கதாகும். இங்கு தான் சோழர்கள் தங்களது இறுதி காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு பழங்கால செங்கற்கள், ஓடுகள், சிதிலமடைந்த கட்டிடங்களும் காணப்படுகிறது. மேலும் பயன்பாடற்று கிடைக்கும் இவ்விடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

குற்றாலத்தில் விற்பனையாகும் சீசன் பழங்கள்

image

▶️ரம்பூட்டான்
▶️மங்குஸ்தான்
▶️துரியன் பழம்
▶️நாட்டு சீத்தா
▶️ஸ்டார் ப்ரூட்
▶️வால்பேரீக்காய்
▶️முட்டைப் பழம்
▶️பப்ளி மாஸ்
▶️கிளிமூக்கு மாங்கா
▶️பன்னீர் கொய்யா
▶️காட்டு நெல்லிக்காய்
▶️சீனி நெல்லிக்காய்
▶️பிளம்ஸ்
▶️பட்டர் ப்ரூட்
▶️சீனி கொய்யா என 30க்கும் மேற்பட்ட பழங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. *ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

திருவாரூர்: ரூ.1 கோடி வரை கடன் உதவி-கலெக்டர்

image

தமிழக அரசினுடைய ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இதற்கான திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசால் வழங்கப்படுகிறது என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News August 20, 2025

மதுரையில் 2000 பேருக்கு வேலை உறுதி.!

image

மதுரையில் வரும் சனிக்கிழமை 23.8.25 அன்று மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊராக வளர்ச்சி துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 80 நிறுவனங்களிலிருந்து 2000க்கு மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம்.இந்த நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News August 20, 2025

புதுக்கோட்டை: ரூ.9,600 மானியம் வழங்கும் திட்டம்!

image

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் “தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்திற்கு “எக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தினை சமன்படுத்திடவும், டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மேற்கொள்ளவும் இம்மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>உழவன் செயலியில்<<>> முன்பதிவு செய்யவேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!