Tamilnadu

News November 19, 2024

சேலம் வரும் அமைச்சர் பெரியகருப்பன்

image

சேலம் மாவட்டத்தில் நவ.20-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில், புதிய நியாய விலைக்கடை கட்டடங்களைத் திறந்து வைத்தும், புதிய கூட்டுறவு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர்.

News November 19, 2024

‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமனம்

image

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பெண் போலீசார் அந்த பகுதி கல்வி நிறுவங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பார். இவர்கள் மாணவிகளுடன் தோழியைப்போல பழகுவர். வீட்டில், பள்ளியில் பகிர்ந்துகொள்ள இயலாத பிரச்னைகளை இவர்களிடம் தெரிவித்தால் தீர்வு காண்பர். நம் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(நவ.,18) நாகர்கோவிலில் நடந்த விழாவில் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தென்காசி ரேசன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு!

image

தென்காசி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நரசிம்மன் நேற்று(நவ.,18) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வானது நவ.,25ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற உள்ளது. www.drbtsi.in இணையதளம் வழியாக அனுமதிச்சிட்டை பதிவிறக்கம் செய்து கலந்து கொள்ளலாம் என்றார். SHARE IT.

News November 19, 2024

தஞ்சை: கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

பாப்பாநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த நவ.12-ஆம் தேதி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் சிவக்குமார் மற்றும் வைரதேவன் ஆகியோரிடமிருந்து 5.29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இருவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

News November 19, 2024

அழிந்து வரும் மரங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 36.8 சதுர கி.மீ. மட்டுமே வனத்துறை உள்ளது. வருவாய் தரும் பனை மற்றும் ஈச்ச மரங்களை, ஏரிக்கரையோரத்தில் இருந்து வேருடன் வெட்டி, பிற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு, 10 மாதங்களில் மட்டும் 20,200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

News November 19, 2024

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு

image

முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வட சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

280 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

image

செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வங்கி கடன், மகளிர் உரிமைத் தொகை, சிறு தொழில் தொடங்க வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

News November 19, 2024

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

image

அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அங்கு பணியாற்றும் ராஜீவ்காந்தி என்ற இயற்பியல் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2024

“உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்”

image

அரவக்குறிச்சியில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்” நாளை (20.11.24) நடக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளனர்.

News November 19, 2024

ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு

image

தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*