Tamilnadu

News April 19, 2025

முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

image

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News April 19, 2025

போலி பதநீர் விற்பனை – சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக பதநீர் அதிகம் விற்பனையாகிறது. இதில் அதிகம் போலியானவை. எனவே பதநீர் பருகும் போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும். பலர் பதநீருக்கு பதில் அதே சுவை கொண்ட பவுடர்களை சர்க்கரையில் சேர்த்து பதநீர் போல விற்பனை செய்கின்றனர். இதில் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கான திட்டம் அல்ல. குலத்தொழிலை ஊக்குவிக்கிறது. விஷ்வகர்மா திட்டம் படிப்பை விட்டு வெளியேற்றி குடும்ப தொழிலை செய்ய ஊக்குவிக்கிறது. படிப்பை விட்டு குலத்தொழிலுக்கு செல்லுமாறு மாணவர்களை வஞ்சிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுவதாக” கூறினார்.

News April 19, 2025

கீழஈராலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கீழ ஈராலில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் ஏப்.22 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வங்கி, காப்பீட்டு நிறுவனம், மென்பொருள் நிறுவனம் கலந்து கொள்ள இந்த முகாமில் 10 முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9442961164.7812877818 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 19, 2025

கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி 

image

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*

News April 19, 2025

வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

image

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 19, 2025

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

image

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

5 அறிக்கைகளை வெளியிட்டார் முதல்வர் 

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன பொறியியல் உதிரிப்பாக நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பழந்தண்டலில் சாலை கட்டமைப்பு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அறிக்கைகளை வெளியிட்டார்.

News April 19, 2025

ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

image

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு

News April 19, 2025

இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

image

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.

error: Content is protected !!