Tamilnadu

News April 18, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

image

கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன், இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021, ஜூன் 28ம் தேதி அளித்த புகாரி பேரில் மாதவன் போக்சோ சட்டத்தில் கைதானார். இதையடுத்து நாகை போக்சோ கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார்.

News April 18, 2025

திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2025

ஈரோடு: ஆற்றில் மூழ்கி தொழிலாளர் பலி!

image

ஈரோடு, அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம், ஆண் சடலம் ஒன்று இருந்தது. அதை அம்மாபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தபர், பாலமலை பகுதியைச் சேர்ந்த சித்தன் (57) என்பதும், ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதி சென்று, முழ்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

News April 18, 2025

கோவை: மகனை வெட்டி கொன்ற தந்தை கைது

image

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் மகன் விஜயகுமார் (27). மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் விஜயகுமார் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், அரிவாளால் கழுத்தில் வெட்டியதில், விஜயகுமார் பலியானார். பின்னர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.

News April 18, 2025

கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

News April 18, 2025

காதல் திருமணம் செய்தவர் தந்தை மீது தாக்குதல்

image

கடையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முப்புடாதி (25) இவர் கீழ கடையம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் முப்புடாதியின் தந்தையை அவதூறாக பேசி அடித்து தாக்கினர் .இதுகுறித்து சுந்தரம் அளித்த புகார் அடிப்படையில் பெண்ணின் உறவினர்கள் பாலா ,ஷங்கர் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர் ஒருவரை தேடி வருகின்றனர்.

News April 18, 2025

புதுவை இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி

image

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது இ.சி.ஆர் சாலையை சுந்தரி கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த சுந்தரி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 18, 2025

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர்களான இந்திரகுமார் (21), லோகேஷ் (20) இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏப்.16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில், இருவரும் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

News April 18, 2025

கோவிலில் சிலை திருடிய பெண் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

News April 18, 2025

துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.

error: Content is protected !!