India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குநர் மூலம் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 21.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாங்குனேரியைச் சேர்ந்த சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னதுரை Grindr ஆப் மூலம் பழகிய மர்ம நபர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திற்கு இன்று வரவழைத்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தாக்கியது தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதலாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் ஒளி/ஒலி காட்சி வசதிகள், குழந்தைகளுக்குரிய உட்புற வசதிகள் மற்றும் கண்கவர் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை நேய சுழல் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ. 10 இலட்சத்தில் உருவாக்கப்படும் என இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
ஓமலூர் அருகே அடுத்தடுத்து 3 திருக்கோயில்களின் பூட்டை உடைத்து சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்ட தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்சல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியுமாக விளங்கிய பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில்ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அவரது நூற்றாண்டைய ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Sorry, no posts matched your criteria.