India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிதான் 100 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 10 ஆண்டுகள் கழித்து நேற்று (ஏப்16) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுக்கான் இன்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம், இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி லேப்டாப், ஐபோன் சாதனக்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக, வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் நடைபெற உள்ளதென மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (16/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-16) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று 16/04/2025 இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.