India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று ஏப்ரல் 14 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுவையில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 044-28 59 28 28 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளருக்கான (Office Assistant) 5 பணியிடங்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் வெப்பக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் படி படியாக வெப்பம் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை, புறநகரின் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாக கூடும் எனவும் எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் எனும் ஊரில் ஏகாம்படேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குபேரரை வணங்குவோர்க்கு வாழ்வில் அனைத்து வகையான செல்வம் செழித்து மன அமைதியுடன் வாழலாம் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிராபார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் ஏப்.14,15 ஆகிய 2 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து அனைவருக்கும் இலவச தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோயிம் தீரும் என்பது ஐதீகம். வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது மிதவேகத்தில் செல்வோம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம் என வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பாக்கிய லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.