India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உப்பிலியபுரத்தை அடுத்த நாகநல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன்(38) என்பவர் கடந்த சில வருடங்களாக கிட்னி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், மன அழுத்தத்தால் விஷம் குடித்ததாகவும், குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவையினை ( வண்டி எண். 06012, மற்றும் வண்டி எண். 06011 )கோடை விடுமுறையை முன்னிட்டு மேலும் ஒரு மாதம் தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் நேற்று இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அவர், சிவகங்கையை சேர்ந்த சேவுகன் மகன் மணிகண்டன் (37) என்பதும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். தற்கொலை குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி மெயின் ரோட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி உமா(36) என்பவரின் மாமனார் கண்ணையன், மாமியார் மேகலா மற்றும் நாத்தனார் அகிலா ஆகியோர் குழந்தை இல்லாதது குறித்து குறை கூறி உமாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி என்பவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செய்யாறைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த பெண் காதலை கைவிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பாலாஜி நிறுத்திய நிலையில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூரை சேர்ந்த இஸ்மத் நாச்சியார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இஸ்மத் ட பல்வேறு தவணைகளாக ரூ.11,42,736 முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணிகளை செய்து முடித்து ஏமாந்தார் அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்
வேலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்துச் செல்லும் கனிமங்களுக்கு மொத்த இசைவாணைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எதிா்வரும் 21ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மாவட்டத்தில் உள்ள குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகையான கனிமங்களுக்கு விண்ணப்பம் செய்து, நடைச்சீட்டு எனும் இ-பா்மிட் பெற்றுக் கொள்ள குவாரி குத்தகைதாரா்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்
Sorry, no posts matched your criteria.