India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜபாளையம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 16ஆம் தேதி அய்யனார் கோயில் சாலையில் உள்ள மகளிர் என்ற ஒரு நாள் விவசாயி நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் தலைமையில் நகர்மன்ற மகளிர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு டிராக்டரில் மூலம் பயணம் செய்து வயலில் நாற்று நடவு, வயலில் நீர் பாய்ச்சல் போன்ற நகர மன்ற தலைவி நகரமன்ற உறுப்பினர்கள் விவசாயம் செய்து மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி இன்று நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கொப்பனாபட்டி அரசு உதவி பெறும் நாராயணன் செட்டியார் அரசுப்பள்ளியில் இன்று வனத்துறை , தீயணைப்பு, மருத்துவதுறை மற்றும் ஸ்டெப் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன், ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிநாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கிழித்தெறிந்து அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல்-2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கால புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950,18004258373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாடி எனும் குக்கிராமம் பெரம்பலூருக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வழித் தடம் இல்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று(மார்ச் 16) பாலாம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு புதிய போக்குவரத்து வழித்தடத்தை எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.
சீர்காழி அருகே மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் தேவேந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.