India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் இன்று துவங்கியுள்ளன. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் போட்டோ கேலரியில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. கோவையில் அனைத்து அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி, ஊர்காவல்படைக்கு வரும் 20ம் தேதி அன்று ஆள் சேர்ப்பு முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. விருப்பமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் வரும் 18, 19ம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து மரப்பயிர்களான புங்கம் எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.20,000/-மும், இலுப்பை எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.15,000 மானியமாக வழங்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ பணிகளால் இன்று(மார்ச் 16) முதல் ஒரு வாரத்திற்கு OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் துர்யா ஹோட்டல் முன்பு ‘U-turn’ செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூரிலிருந்து வருவோர் உலக வர்த்தக மையம் முன்பு ‘U-turn’ எடுத்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அடுத்த A.வெள்ளோடு அருகே கரிசல்பட்டி பகுதியில் ஆரோக்கியம் என்பவர் இன்று(மார்ச்.16) ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விராலிமலை தனியார் பள்ளி பின்புறம் உள்ள குளக்கரையில் இருந்த செடி, கொடிகள் இன்று காலை (மார்ச்.16) தீப்பிடித்து எரிந்தது.இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
Sorry, no posts matched your criteria.