India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.
தமிழகத்தில் விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக அச்சடிக்கப்பட்ட செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல் (42). இவர் நேற்று (மார்ச் 15) திருவண்ணாமலையில் இருந்து கண்டாச்சிபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் வழுக்கி விபத்துகுள்ளானது. இதில் படுகாயமடைந்த வஜ்ரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திருவெறும்பூர் பள்ளி அருகே நேற்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக பென்னி சேவியர், முருகேசன், ஜான் தனபால் ஆகிய 3 பேரை திருச்சி எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய 1 கார்,12 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்று இவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டையை சேர்ந்தவர் ரமீசா(38). இவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், இன்று கட்டுமான பணிக்காக தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, மின் கம்பியில் தண்ணீர் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் ரமீசா காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். இருப்பினும் வழியிலேயே ரமீசா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் இன்று துவங்கியுள்ளன. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் போட்டோ கேலரியில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. கோவையில் அனைத்து அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி, ஊர்காவல்படைக்கு வரும் 20ம் தேதி அன்று ஆள் சேர்ப்பு முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. விருப்பமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் வரும் 18, 19ம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து மரப்பயிர்களான புங்கம் எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.20,000/-மும், இலுப்பை எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.15,000 மானியமாக வழங்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.