Tamilnadu

News March 17, 2024

குறைதீர் கூட்டம் ரத்து – ஆட்சியர்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தேனி அருகே ஒருவர் பலி – போலீசார் விசாரணை

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் உ.அம்மாபட்டி சாலையிலுள்ள புதிய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று (மார்ச்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

நத்தம் அருகே மீன் பிடி திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குளத்தில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா இன்று(மார்ச்.17) நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பாரம்பரிய முறைப்படி  குளத்தில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். அதிக எடையுள்ள மீன்கள் கை நிறைய கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்

News March 17, 2024

மது கடைகளுக்கு விடுமுறை

image

திருவாரூரில் உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவில் தேர் திருவிழா மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் ஒருநாள் விடுமுறை என கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

News March 17, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 17, 2024

திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி

image

திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

News March 17, 2024

விழுப்புரம்: மர்மமான முறையில் இறந்த தையல் கலைஞர்

image

விழுப்புரம் மாவட்டம் வீராமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (57), தையல் கலைஞர். இவர் சிறுவந்தாடு அடுத்துள்ள மோட்சகுளம் பகுதியில் உள்ள அக்னி குளம் அருகே கரும்பு தோட்டத்தில் கை, தலை, காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் நேற்று (மார் 16) இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

நீலகிரி: “தடையை மீறி ஆபத்தை தேடாதீர்கள்”

image

திண்டுக்கல் கோபால்பட்டி வேலுமணி மகன் பிரவீன் (29). இவர் குன்னூர் அருகே செங்குட்டுவராயர் மலை பகுதிக்கு சென்று, செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் இன்று (மார்ச் 17) கூறுகையில், “ஆபத்தான இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடையை மீறி இது போன்ற ஆபத்தில் சிக்காதீர்கள் ” என அறிவுறுத்தினர்.

News March 17, 2024

திருவள்ளூர்: பரோட்டா சாப்பிட்டவர் உயிரிழப்பு

image

ஆவடி அடுத்த பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 17, 2024

நாகை கலெக்டர் அறிவிப்பு 

image

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைப்பெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நாளை முதல் (18.3.24) ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.