India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் வாட்ஸ்ஆப் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், அதன் மூலம் உங்களுக்கு அசாதாரண சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தி பணம் பறிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட காவல் துறை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நேற்று X பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று(மார்ச்.17) காலை அய்யனூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் மண் குவியலை கொட்டி பாதையை ஆக்கிரமித்ததாக கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் செந்துறை அடுத்த இலங்கைச்சேரியை சேர்ந்த பவளக்கொடி என்பவர் கடந்த வியாழக்கிழமை(மார்ச்.14) அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மருத்துவ செலவிற்கு அடமானம் வைக்க அவரது நகையை கேட்டதாகவும், தர மறுத்த பவளக்கொடியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று மாலை கொளப்பாக்கத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் “செப்டிக் டேங்க்” சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிளம்பாக்கம் போலீசார் தேவராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் உ.அம்மாபட்டி சாலையிலுள்ள புதிய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று (மார்ச்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குளத்தில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா இன்று(மார்ச்.17) நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பாரம்பரிய முறைப்படி குளத்தில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். அதிக எடையுள்ள மீன்கள் கை நிறைய கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்
திருவாரூரில் உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவில் தேர் திருவிழா மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் ஒருநாள் விடுமுறை என கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.