Tamilnadu

News March 18, 2024

தென்காசி:அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

image

தென்காசியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் “சுவிதா ” என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள்,கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தனர்.

News March 18, 2024

ராமநாதபுரம் அருகே இருவர் கைது

image

ராமநாதபுரம் புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். நிதி தணிக்கை உதவி இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பூட்டிக் கிடந்த இவரது வீட்டில் 45 பவுன் நகை மார்ச் 8ல் திருடு போனது.இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோகன் (39), மதுரை காளவாசல், சம்மட்டிபுரம் மகேந்திரன் (33) ஆகியோரை பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 18, 2024

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா 

image

பொன்னமராவதி அருகே கொன்னையூர் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனியில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், ஊர்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

News March 18, 2024

பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மைத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் இன்று(மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 18, 2024

தூத்துக்குடி: திமுக செயற்குழு கூட்டம்

image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 18, 2024

8 டன் முருங்கைக்காய் கொள்முதல்

image

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. ஒரு கிலோ முருங்கைகாய் 12 ரூபாயுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

News March 18, 2024

அண்ணாமலையார் திருக்கோயிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த அவர், அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

News March 18, 2024

மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

image

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

News March 18, 2024

நாமக்கலில் மஞ்சள் பை விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மணாகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில் நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

News March 18, 2024

யானைகள் நடமாட்டம்:  வனத்துறை அறிவிப்பு

image

கோவை மாவட்டம் கரடிமடை சுற்றுக்குட்பட்ட பச்சாபாளையம், தீத்திபாளையம், கரடிமடை, பேரூர், போஸ்டல் காலனி ஆறுமுககவுண்டனூர் ஹைடெக் சிட்டி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.