Tamilnadu

News March 18, 2024

திருநெல்வேலியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

தென்சென்னையில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

புதுச்சேரியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

News March 18, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 18, 2024

மதுரை வழியாக மேலும் இரு ரயில்கள்

image

தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 18, 2024

கடலூர்: போஸ்டர்கள் அகற்றும் பணி

image

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி நடந்தது. அதேபோல் துணை தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகே வாகன சோதனை நடத்தினர்.

News March 18, 2024

நெல்லை: அரசியல் கட்சிகளே உஷார்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஊடகங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News March 18, 2024

புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.

News March 18, 2024

திமுக பிரமுகர் கொலையில் இளைஞர் சரண்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக்கை (38) கடந்த 15ம் தேதி 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பாகலூர் போலீசில் பிரதாப் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 18, 2024

திருச்சி மக்களே இதை மிஸ் பண்ணாதீங்க 

image

திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் துரித உணவுகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும்
8903363396 என்ற எண்ணை அழைக்க கூறப்பட்டுள்ளது.