Tamilnadu

News March 19, 2024

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் நேற்று (மார்ச் 18) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, பலமுறை பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News March 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தம் – கலெக்டர்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

செய்யூர் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி

image

செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த தர்ப்பூசணி அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டன் ஒன்று ரூ.12,000 விற்ற தர்ப்பூசணி தற்போது ரூ.15,000 முதல் 17,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

News March 19, 2024

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

image

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று(மார்ச் 18) நடந்தது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றினார். முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

News March 19, 2024

சென்னை: கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை

image

காசிமேடு பகுதியில் கலா என்ற 65 மூதாட்டி மகன் சீனிவாசன் உடன் வசித்து வந்தார். அடிக்கடி கலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால், நேற்று கலாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

நகையால் பிரச்சனை – ஒருவர் கைது

image

அரியலூர், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி, ஜெயக்கொடி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் மணி தன்னுடைய மாமியார் நகையை தர வேண்டும் என ஜெயகொடியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்  மணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை  தரப்பில் நேற்று(மார்ச்.18) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

தேர்தல் புகாருக்கு இந்த எண்களில் அழையுங்கள்-ஆட்சியர்

image

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரம் தொடர்ந்து செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 1800 425 5799 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 0452 2535374, 2535375, 2535376, 2535377, 2535378 தொலைபேசி எண்களையும் அழைக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு

News March 19, 2024

கரூர்: ரூ.3,38,388 பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

image

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர், சின்னரெட்டியப்பட்டி , ஆர்.டி.மலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.3,38,388 ரொக்க பணத்தை பறக்கும் படை அலுவலர் லலிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

News March 19, 2024

அந்தியூர் அருகே வேலை வாய்ப்பு முகாம்

image

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.

News March 19, 2024

வேனில் 405 சேலைகள் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(மார்ச்.18) திருச்செந்தூர் ஆலந்தலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 405 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.