India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் இன்று (மார்ச் 20) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய கவர்னர் பொறுப்புக்களை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கவர்னர் நியமிக்கபடும் வரை அவர் இந்த பொறுப்புக்களை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்.
மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமக்கல் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நபராக வந்திருந்தார்.அவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.சோதனைக்கு பிறகு காந்தியவாதி ரமேஷை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்
குளச்சலை சேர்ந்த சூசைராஜ் மகன் ஜோனி(32). மீன் வியாபாரியான இவர் நேற்று பைக்கில் வாணியக்குடியில் இருந்து முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எதிரே குளச்சல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஜோனியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜோனி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிற்பகல் 12:00 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்தது. இந்நிலையில் உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் பாராளுமன்றத் தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று கடலூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.