India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகர போலீசார் கடந்த நான்கு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் என மொத்தம் 61 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், மாநகரில் குற்றங்களை குறைக்கவும் 51-ஏ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக நேற்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். மேல்விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்த நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல்ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும், வெயிலில் செல்லும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், அடிக்கடி பழச்சாறுகளை பருகுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் HINDUSTAN GROUP OF COMPANY-ல் 96 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18- 25 வயதுடைய ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.19,000- ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு மலரும் புன்னகை என்ற திட்டத்தின் கீழ் பல் கிளிப் (BRACES) பொருத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ரூ.30,000 வரை செலவாகும் நிலையில் இத்திட்டத்தில் 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல் கிளிப் பொருத்தப்பட்டது. இத்திட்டம் சிறப்பாக பலன் அளித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தைக்கால் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட தனியார் பேருந்து நின்றபோது கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி சென்ற இருசக்கர வாகனம் பேருந்தின் பின் பகுதியில் வேகமாக மோதியது. பேருந்து கண்ணாடியில் இருசக்கர வாகன ஓட்டியவர் தலை மோதி காயமடைந்தார். உயிர்சேதமின்றி இருசக்கர வாகன ஓட்டி காயத்துடன் தப்பினார். கொள்ளிடம் காவல் நிலையத்திற்க்கு கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெப்ப அலை குறித்த உள்ளூர் வானிலை செய்திகளை, செய்திதாள், வானொலி தொலைக்காட்சிகள், TN ALERT செயலி மூலம் தெரிந்து கொண்டு அன்றைய பணிகளை திட்டமிடுமாறும், வீட்டிலிருந்து வெளியே செல்வது மிக அவசியமாக இருப்பின் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை வெளியே செல்வதை தவிர்க்கும் மாறும் காலை மாலை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள ஒன்றியங்கள் கானை, விக்கிரவாண்டி, மைலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், கண்டமங்கலம், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மதியம் 2.30.மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.