India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை நீர்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்படுகிறது இணையவழி ஏலம் நடக்கும் பங்கேற்க விரும்புவோர் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் 19494/எப்3/2024/9 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை வரும் 22ம் தேதி பகல் 2:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
புத்தூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் மது வாங்கிய போது, பாட்டிலின் உள்ளே பல்லி இறந்து கிடந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது நிறுவனத்தின் குறைபாடு எங்களுக்கு சம்மந்தமில்லை எனக் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் http://tnrd.tn.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா குப்தா அறிக்கையில், தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என கூறியுள்ளார், தேவையற்ற மின்னஞ்சல் லிங்குகளை திறப்பதன் மூலம் தங்களின் தகவல்கள் திருடப்படுகிறது இதன் மூலம் தங்களை மிரட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வேலூர் சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் தொடங்கியது. இதில் முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் 8 வட்டார குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், & 155 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய உள்ளன. விண்ணப்பங்களை <
கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.21 முதல் 40 வயதுக்குள் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல் 28க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுடைய பெண்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.