India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர், சேக்கிழார் நகரைச் சேர்ந்த 76 வயதான நடராஜன், நேற்று தனது பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளியில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.
மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக.,22-ம் தேதி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க..
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.
தென்காசி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த, துணைத்தேர்வில் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மணவர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தென்காசி கோட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.08.2025) (03.09.2025) தேதிகளிலும், சங்கரன்கோவில் கோட்டத்தில் ஏ.வி.கே பள்ளியில்28.08.2025, 09.09.2025 நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று(ஆக.20) இரவு 11 மணி முதல் இன்று(ஆக.21) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.