India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் SDAT- ஸ்டார் அகாடமி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்திரமேரூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (45), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினரான எட்டியப்பன் உடன் செய்யாறு – பெருநகர் சாலை கீழ்நீர்குன்றம் கிராமம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் விநாயகம் உயிரிழந்தார். பைக்கை ஒட்டிச் சென்ற எட்டியப்பன் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பீகாரை சேர்ந்தவர் முகமது சலீம்(43). கட்டட கூலி தொழிலாளியான இவர், கோவை, கோவில்பாளையம், வழியாம்பாளையத்தில் அடுக்கு மாடி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது முதல் தளத்திலிருந்து, எதிர்பாராத விதமாக செங்கல் ஒன்று, முகமது சலீம் தலையில் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு, நடுக்காவேரியில் விஷம் குடித்து இறந்த சகோதரிகள் வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த நிலையில், நேற்று ஏப்ரல் 16 புதன்கிழமை நடுக்காவேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் மணிமேகலை, உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் தூசி அருகே உள்ள உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த துருவேஸ்வரன் என்ற 3 வயது சிறுவன் நேற்று தனது தந்தை மொபட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, மொபெட் கீழே விழுந்ததில், சிறுவன் துருவேஸ்வரன் அருகில் இருந்த குடிநீர் தொட்டியில் விழுது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்தான். இதுகுறித்து தூசி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க பெற்றோர்களே.
மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.
கயத்தாறு அருகே உள்ள இலந்தை குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த காளி பாண்டியன் என்பவர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.16) காளி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிதான் 100 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 10 ஆண்டுகள் கழித்து நேற்று (ஏப்16) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.