India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அப்துல் சமத் (59) என்பவர் மீது கரூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று(ஏப்.16) கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
பாட்னாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது அண்ணனுடன் சண்டையிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ரயில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அப்பெண்ணை, 2 பெண்கள் பத்திரமாக மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மொழி தெரியாமல் தவித்த மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேய மிக்கவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.5 ஆயிரத்துடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
மங்கலம்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் வெங்கடேசன் (42). இவர் தனது டியூஷனில் படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமழிசை பகுதியில் எபினேசர் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 7 பேரில் மூவரை கடந்த 15ஆம் தேதி இரவு வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கவியரசு (26) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமவெளிப் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் 11 வயது மகளிடம், அப்பகுதியில் இருந்த முகேஷ் குமார்(23) என்ற வட மாநில தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் முகேஷ் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.
பண்ருட்டி திருவதிகையில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒன்று அந்த முதியவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.