Tamilnadu

News August 21, 2025

தாம்பரம்: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22-08-2025) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 8-12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, பொறியியல் படித்த மாணவர்கள் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04179-222033 தொடர்பு கொள்ளலாம் .

News August 21, 2025

தென்காசி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டுமா!

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

புதுக்கோட்டை: குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி!

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், <>-1<<>> என்ற இணையதளத்தில் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News August 21, 2025

ஈரோட்டில் இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆவணங்களுடன் இ-சேவை மையத்தை அணுகலாம். கூடுதல் தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

கரூரில் இன்று முற்றிலும் இலவசம்!

image

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேரா சிரியர்களால் பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 04324-294335, 73390-57073 எண்களில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

திருப்பூரில் திடீர் மாற்றம் தெரிஞ்சிக்கோங்க!

image

திருப்பூர், அணைப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வஞ்சிபாளையம் – புஷ்பா சந்திப்பு: அவிநாசி சாலை அல்லது ரங்கநாதபுரம் வழியாகச் செல்லலாம்.சிறுபூலுவப்பட்டி வழியாக குமார் நகருக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுபூலுவப்பட்டிக்குச் செல்லும் வாகனங்கள் சலவை பட்டறை சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.SHARE பண்ணுங்க!

News August 21, 2025

தஞ்சை: மனைவியை கொலை செய்த கணவன் கைது

image

கும்பகோணம் அருகே பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவருடைய மனைவி ஜெய சித்ரா. கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப தகராறு ஒன்றில், ஜெயசித்தராவை மோகன்ராஜ் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தலைமறைவாக இருந்த மோகன்ராஜை திருநீலக்குடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News August 21, 2025

மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவுள்ளனர். மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை சேர் பண்ணுங்க.!

News August 21, 2025

புதுவை: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை (ஆக.22) நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதய சிகிச்சை, சிறுநீரகவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் வருகை புரிந்து சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்க உள்ளனர் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW

error: Content is protected !!