Tamilnadu

News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

image

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 17, 2025

திருச்சி: புனித வெள்ளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

கள்ளக்குறிச்சியில், 285 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய காவிரிப் படுகை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியில் செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க.. உங்க ஏரியா ல மழை பெய்யுதா?

News April 17, 2025

தனித்துவ அடையாள எண் காலக்கெடு நீட்டிப்பு

image

குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42,000 விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட எவ்வளவோ களங்களும், தேவைகளும் உள்ளது. அதை உணர்ந்து செயல்படுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

பெரம்பலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

கிருஷ்ணகிரியில் 102 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

error: Content is protected !!