India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (ஏப்ரல் 18) புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். இதனை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும், மற்ற நேரத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் V.S.N.முஹம்மது ஆதம் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்து அழைப்பு கொடுத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.100000 பாராட்டுப் பத்திரம் பதக்கத்துடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் 3.5.25 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று துவாக்குடியில் 20 மி.மீ, துறையூரில் 34 மி.மீ, லால்குடியில் 13.6 மி.மீ என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 67.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.
போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தலைமையகம் மற்றும் 17 கிளைகளில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடன் மேளா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி கொக்கரகுளம் ரோஸ் மஹாலில், 22 ஆம் தேதி வள்ளியூர் எம் எஸ் மகாலில், 24 ஆம் தேதி அம்பை அரோமா பள்ளியில் நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவர்கள் 2025 ம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே.3 மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இ.ஆ.ப., தகவல் அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லித்தோப்பை சேர்ந்த ராமச்சந்திரனை வாட்ஸ் ஆப் மூலம் பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் தொடர்பான லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை உண்மை என நம்பி, ராமச்சந்திரன் பதிவிறக்கம் செய்து, வங்கி விவரங்களை பதிவிட்டு உள்ளார்.அதன்பின், சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 81 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்து, ஏமாற்றியுள்ளனர். அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
Sorry, no posts matched your criteria.