Tamilnadu

News August 21, 2025

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூர் இடையே பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து 27ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூரை அடையும். மைசூரிலிருந்து 26ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News August 21, 2025

விநாயகர் சிலைகளை கரைக்க 5 இடங்கள் தோ்வு!

image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது. எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரை விநாயகா் கோயில், பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதி, ப.வேலூா் காவிரி ஆறு,மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் காவிரி படித்துறை என 5 இடங்கள் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தர்மபுரியில் இலவச சுயதொழில் பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள RSETI தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் கான்கிரீட் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு, உடை, பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்த பின்னர் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2025 மேலும் விவரங்களுக்கு: 04342230511, 6383147667ஐ தொடர்பு கொள்ளலாம்.

News August 21, 2025

அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

image

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

கள்ளக்குறிச்சி: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் கிளிக்<<>> செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வரும் 3ம் தேதி மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

Breaking: திருப்பத்தூரில் பெண் சிசுக் கொலை, மருத்துவர் கைது

image

பணத்திற்காக பெண் சிசுக்களை அழித்த வழக்கில் திருப்பத்தூர் மருத்துவர் சுகுமார்(60) கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வந்த 8 கர்ப்பிணிகள், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய திருப்பத்தூர் வந்திருந்தனர். இதுதொடர்பாக, 5 புரோக்கர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மருத்துவர் சுகுமாரை கந்திலி போலீசார் கைது செய்துள்ளனர்.

News August 21, 2025

புதிய பண மோசடி; நெல்லை எஸ்பி எச்சரிக்கை

image

வங்கி மேலாளர் எனக் கூறி பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்கள் ஓடிபி குறித்து மக்கள் கூறக்கூடாது. புதிய பிக்சட் டெபாசிட் லோன் சம்பந்தமான ஏ.பி.கே பயில்களை மொபைலில் பதிவிறக்கம் செய்ய கூடாது. போலி அழைப்புகளை உடனே துண்டித்து வங்கி கிளைக்கு சென்று உறுதி செய்ய வேண்டும். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 டோல் ஃப்ரீ எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். *SHARE IT

News August 21, 2025

நாகை கலெக்டர் கடுமையான எச்சரிக்கை

image

உவர் நீர் இறால் பண்ணைகளுக்கான பதிவுச் சான்றினை புதுப்பிக்காமல், நாகை மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். பதிவுச் சான்று பெறாமலும், பதிவினை புதுப்பிக்காமலும் இறால் வளர்க்கக்கூடாது என கலெக்டர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 21, 2025

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

image

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மைசூர், மாண்டியா, கெங்கேரி, பெங்களூரூ, கிருஷ்ணராஜபுரம் போன்ற பகுதிகளில் இருந்து நாமக்கல் வந்து செல்லவும், நாமக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று திரும்பவும் 06241/06242 மைசூர் – திருநெல்வேலி – மைசூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாமக்கல் மக்களே முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் .

error: Content is protected !!