Tamilnadu

News April 18, 2025

லாரி மோதி ஒருவர் பலி

image

செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News April 18, 2025

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

image

கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகாபுரம் மேல தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (53) . இவர் நேற்று உழவு பணி மேற்கொள்ள தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு வள்ளிநாயகபுரம் – கழுகுமலை சாலையில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் கோட்டத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

தூத்துக்குடி சுற்றுலா தலமான முத்தாரம்மன் திருக்கோயில்

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 20கி.மீ தொலைவில் குலசேகரபட்டினத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்கக் கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது.இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாப்படுகிறது.கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களில் உருவங்கள் வேடம் அணிந்து பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மனை வழிபடுகின்றனர்

News April 18, 2025

ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

image

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News April 18, 2025

இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள்

image

அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.

News April 18, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (17.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 18, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் 

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.

News April 18, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-17) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 18, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!