India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மோகன்(70) என்பவர் உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்.24ம் தேதி கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(ஏப்.16) மாலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு 45 வயது இதர பிரிவினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055914 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாகம் சான்றிதழ்களும், 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளிகள் என சான்றிதழ்களும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளர்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சை, பாபநாசம் அரசலாறு பாலத்தின் கரையோரமாக அதிக அளவிலான குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தால் அவை காய்ந்து இருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்ததால் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமைடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,(18). இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் நேற்று(ஏப்.17) வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த, காமாட்சிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (42) குடும்பத்துடன் மாருதி 800 காரில் சுற்றுலா சென்று விட்டு திரும்பினார். அப்போது மத்துார் அருகே, கண்ணன்டஹள்ளியில், எதிரே வந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது. இதில், காரிலிருந்த அவரது தாய் உமாராணி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் இடிபாடுகளில் சிக்கிய கோபிநாத்தை 2 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.
நீலகிரி: கூடலூர், தேவர்சாலை பாடந்துறையைச் சேர்ந்த ந்ஜமுதீன்(33). இவர் போதைப் பொருள் கடத்தி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, நிஜாமுதீன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிபதி விசாரணையில் கூடலூர் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன் உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.