India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வங்கி கடன், மகளிர் உரிமைத் தொகை, சிறு தொழில் தொடங்க வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அங்கு பணியாற்றும் ராஜீவ்காந்தி என்ற இயற்பியல் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சியில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்” நாளை (20.11.24) நடக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*
மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்.23ஆம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தொடர்புடைய இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் சேலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் காரணமாக, சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் ஆணையாளர் ரூ.10 நாணயத்தை அனைத்து மாவட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தினை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.
Sorry, no posts matched your criteria.