India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்
ராஜ ராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சியின்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அவர் ராமநாதபுரம் சீமை இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு அறிவுறுத்தியதோடு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு “இராம்நாட்” என்ற பெயரில் ஒரு விமானத்தை கொடையாக கொடுத்துள்ளார்.மேலும் இராஜ ராஜேஸ்வர சேதுபதி,போர்க்கால நிதியுதவிக்காக பல லட்சங்களை வழங்கியது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரர் கோவில், சென்னை அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு இருக்கும் ஒரே கோவில் இதுதான். இக்கோவிலில், பௌர்ணமி, அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம. *நண்பர்களுக்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*
மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.
ராமரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் தமிழநாட்டில் இரண்டு உள்ளன. ஒன்று ராமேஸ்வரம் மற்றொன்று தர்மபுரி தீர்த்தகிரி மலை கோயில். ராமர் அயோத்தி திரும்பிய போது சிவனுக்கு பூஜை செய்ய தனது அம்பை எய்து உருவாக்கிய தீர்த்தம் தான்இங்குள்ள ராமர் தீர்த்தம். இதனாலேயே மூலவர் தீர்த்தகிரிஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். இங்குள்ள தீர்த்ததில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
திருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தில் அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த ஏழை விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த இவர், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, தூக்கு தண்டனை பெற்று உடல்நலக்குறைவால் திருச்சி சிறையில் உயிரிழந்தார். திருவாரூர் மண்ணின் மைந்தர் களப்பால் குப்புசாமியின் 77-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! SHARE.
திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயத்தின் சிறப்பு. இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார் அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக்காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார், அவருக்கு இறைவன் காட்சி தந்து கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். இந்த தளத்தில் நியமத்தோடு வேண்டினால் வியாபாரக்கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
ஈரோடு மாவட்டம் பாரியூர் அருகே பிரசித்தி பெற்ற கொண்டதுக்காளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக காளியம்மன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
வேலூருக்கு அருகில் இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற பட்ஜெட் சுற்றுலா தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாலமதி மலை
2.ஏலகிரி
3.புங்னூர் ஏரி
4.அமிர்தி காடு
5. கைகால் நீர்வீழ்ச்சி
இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்
Sorry, no posts matched your criteria.